Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்ரீலங்காவில் நாளை (ஜூன் 13ம்) பள்ளி, கல்லூரிகள் & அலுவலகங்களுக்கு விடுமுறை

ஸ்ரீலங்காவில் நாளை (ஜூன் 13ம்) பள்ளி, கல்லூரிகள் & அலுவலகங்களுக்கு விடுமுறை

By: vaithegi Sun, 12 June 2022 1:13:47 PM

ஸ்ரீலங்காவில் நாளை (ஜூன் 13ம்) பள்ளி, கல்லூரிகள் & அலுவலகங்களுக்கு விடுமுறை

ஸ்ரீலங்கா: ஸ்ரீலங்காவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சிக்கலை சமாளிப்பதற்காக நாளை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அவ்வரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீலங்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் & அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் பொருளாதார வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள், எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா அரசின் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஸ்ரீலங்காவில் நிலவும் போக்குவரத்து சிரமங்களை சமாளிக்கவும், மின்சார அல்லாத நேரங்களிலும் அலுவலகங்கள் நடத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவும் நாளை விடுமுறை என அவ்வரசு அறிவித்தது.

இதனால், ஸ்ரீலங்காவில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்பு , அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்திற்கும் ஜூன் 13ஆம் தேதியன்று நாளை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|