Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீர் மற்றும் ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

காஷ்மீர் மற்றும் ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sat, 26 Nov 2022 3:10:41 PM

காஷ்மீர் மற்றும் ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியா: பள்ளிகளுக்கு விடுமுறை ..... ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெள்ளிக்கிழமை காஷ்மீர் மற்றும் ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. பள்ளத்தாக்கில் ஏற்கனவே பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் வானிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து இந்த உத்தரவானது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும். இந்த விடுமுறையானது ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 முதல் தொடங்கி பிப்ரவரி 28, 2023 வரை 3 மாதங்களுக்கு விடப்பட்டுள்ளது. எனவே அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

holiday,kashmir,jammu ,விடுமுறை, காஷ்மீர் ,ஜம்மு

இதனை அடுத்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை டிசம்பர் 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல ஆம் 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 28 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறை கால கட்டத்தில் மாணவர்களுக்கு எதாவது சந்தேகம் எனினும் அதை ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் தீர்த்து வைக்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக வந்து பள்ளிகள் திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :