Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தனியார் துறைகளுக்கும் ஜூலை 8 முதல் அடுத்த 4 நாட்களுக்கு விடுமுறை

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தனியார் துறைகளுக்கும் ஜூலை 8 முதல் அடுத்த 4 நாட்களுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 01 July 2022 7:17:20 PM

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தனியார் துறைகளுக்கும் ஜூலை 8 முதல் அடுத்த 4 நாட்களுக்கு விடுமுறை

சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் ஜூலை 9 அன்று கொண்டாடப்பட இருக்கும் ஈத் அல் அதா பண்டிகையை குறிக்கும் வகையில் தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு 4 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) அறிக்கையின்படி, 2 துறைகளுக்கும் ஈத் அல் அதா விடுமுறைகள் ஜூலை 8 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11 வரை 4 நாட்களுக்கு நீடிக்கும்.

இதை தொடர்ந்து ஜூலை 12 செவ்வாய்க்கிழமை முதல் வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்நாட்டில் உள்ள அனைத்து தனியார் துறைகளுக்கும் ஜூலை 8 துவங்கி 11ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. இப்போது ஹஜ் வருடாந்திர யாத்திரையின் முக்கியமான நாளை குறிக்கும் அராஃபத்தின் சடங்கு ஜூலை 8 வெள்ளிக்கிழமை அன்று துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

private sector,holidays ,தனியார் துறை,விடுமுறை

மேலும், ஈத் அல் அதாவின் முதல் நாள் ஜூலை 9 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த ஈத் அல் அதா பண்டிகை அல்லது ‘தியாகப் பெருநாள்’ என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், தங்களது கடவுளுக்காக அனைத்தையும் தியாகம் செய்த இப்ராஹிம் நபியின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த விழா இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மற்றும் இறுதி மாதமான துல் ஹஜ்-ன் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது

Tags :