Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 நாட்கள் பயணமாக சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

2 நாட்கள் பயணமாக சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

By: Nagaraj Fri, 20 Nov 2020 8:02:20 PM

2 நாட்கள் பயணமாக சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

2 நாள் பயணம்... இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்பட்டுள்ள 380 கோடியில் புதிய நீர்த்தேக்கத்தை திறந்துவைத்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

amitsha,2 days,trip,executives,meeting ,அமித்ஷா, 2 நாட்கள், பயணம், நிர்வாகிகள், கூட்டம்

மேலும் 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் பாஜக மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அமித்ஷா விவாதிக்கிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பிடிக்காத பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காகதான் அமித்ஷா வருகை புரிகிறார் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|