Advertisement

இன்று மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

By: vaithegi Mon, 29 May 2023 2:04:31 PM

இன்று மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

மணிப்பூர் :இன்று மணிப்பூர் பயணம் .... இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக மணிப்பூர் செல்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் மிகவும் வன்முறையாக மாறிய நிலையில்,

அங்கு, வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. மேலும், வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்ததோடு, 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

home minister amit shah,manipur ,உள்துறை அமைச்சர் அமித்ஷா,மணிப்பூர்

இந்த நிலையில், இன்று மணிப்பூரில் சுமார் 30 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர் என முதல்வர் பிரேம் சிங் தெரிவித்துயிருந்தார்.

இதன் இடையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Tags :