Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளில் இருந்து 195 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

வெளிநாடுகளில் இருந்து 195 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

By: Nagaraj Mon, 28 Dec 2020 4:22:12 PM

வெளிநாடுகளில் இருந்து 195 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

195 இலங்கையர்கள் நாடு திரும்பினர்... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 195 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 150 பேரும் இந்தியாவில் இருந்து 18 பேரும் கட்டாரில் இருந்து 16 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் மாலைத்தீவில் இருந்து 5 பேரும் பாகிஸ்தானில் இருந்து நான்கு பேரும் சௌதி அரேபியாவில் இருந்து இருவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

abroad,sri lankans,temporarily,closed ,வெளிநாடு, இலங்கையர்கள், தற்காலிகமாக, மூடப்பட்டுள்ளது

இதற்கிடையில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவருடன் தொடர்புடைய அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் முதல்வரின் அலுவலக வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தோடு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் அன்றாட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|