Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை... தனியார் துறைக்கு கோரிக்கை

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை... தனியார் துறைக்கு கோரிக்கை

By: Nagaraj Sat, 18 June 2022 7:42:05 PM

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை... தனியார் துறைக்கு கோரிக்கை

இலங்கை: தனியார் துறைக்கு கோரிக்கை... இலங்கையின் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமை தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும் பின்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென தொழில் அமைச்சின் செயலாளர் ஏ.ஜே . விமலவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரை அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

procedure,work at home,2 weeks,routine,fuel,crisis ,நடைமுறை, வீட்டில் வேலை, 2 வாரங்கள், வழமை, எரிபொருள், நெருக்கடி

இறக்குமதி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் உரிய வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறு அரசாங்கத்தினால் தனியார் பிரிவினரிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரச நிறுவனங்களை நடத்தும் முறைமை தொடர்பான விடயங்களை பொது நிர்வாக அமைச்சினூடாக சுற்றறிக்கை அனுப்பி தெளிவுபடுத்தியுள்ளதாக அரச தலைவர் செயலகம் நேற்று அறிவித்திருந்தது.

இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு, எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு திருப்பும் வரை சுமார் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Tags :
|