Advertisement

கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறார் ஹோண்டுராஸ் அதிபர்

By: Nagaraj Sat, 27 June 2020 10:03:28 AM

கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறார் ஹோண்டுராஸ் அதிபர்

மருத்துவ நிபுணர்கள் தகவல்... ஹோண்டுராஸ் அதிபருக்கு காய்ச்சல் இல்லை. பொதுவான உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் அதிபராக 2014-ம் ஆண்டு முதல் பதவி வகிப்பவர், ஜூவான் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ் (51). இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

medical specialists,honduras president,corona,health ,
மருத்துவ நிபுணர்கள், ஹோண்டுராஸ் அதிபர், கொரோனா, உடல்நிலை

கதிரியக்க சோதனையில், அவரது நுரையீரலில் ஊடுருவல்கள் அதிகரித்து இருப்பதும் மற்றும் ஆக்சிஜன் செறிவு குறைந்து இருப்பதும், அழற்சி கூடி இருப்பதும் தெரிய வந்தது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

தற்போது அவர் குணம் அடைந்து வருகிறார். அவருக்கு காய்ச்சல் இல்லை. பொதுவான உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|