Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும்; நிபுணர்கள் எச்சரிக்கை

ஹாங்காங் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும்; நிபுணர்கள் எச்சரிக்கை

By: Nagaraj Thu, 28 May 2020 9:27:28 PM

ஹாங்காங் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும்; நிபுணர்கள் எச்சரிக்கை

சீனாவின் எடுக்கும் நடவடிக்கையால் ஹாங்காங் கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹாங்காங்கை சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயல்கிறது. இதனால் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் இதனை எதிர்த்து பெரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.


tax exemption,other benefits,exports,inventory,economy ,
வரிவிலக்கு, பிற சலுகைகள், ஏற்றுமதி, பட்டியல், பொருளாதாரம்

செமி அடானமஸ் எனப்படும் சீனாவின் சில கட்டுபாடுகள் மட்டுமே கொண்ட ஹாங்காங், தற்போது சீனாவின் இந்த முயற்சியால் கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஹாங்காங்கின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் வேலையின்மை, பஞ்சம் ஏற்படலாம். சீனாவின் இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்கா, ஹாங்காங்குடனான வர்த்தகத் தொடர்பை துண்டிக்க முடிவெடுத்துள்ளது. முன்னதாக அமெரிக்க மாநில செயலாலர் மைக் பாம்பியோ இதனை அறிவித்தார்.

தற்போது ஹாங்காங் தொழில் ஜாம்பவான்களில் ஒருவரான லி கா சிங், சீனாவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தொழில் துறையில் சூப்பர்மேன் என அழைக்கப்படுபவர் லி. 2018ம் ஆண்டுவரை சிகே ஹட்ஜிசான் என்ற நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தவர். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் சீன தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸிக்கள் ஹாங்காங்கை நேரடியாகக் கட்டுப்படுத்தும்.

tax exemption,other benefits,exports,inventory,economy ,
வரிவிலக்கு, பிற சலுகைகள், ஏற்றுமதி, பட்டியல், பொருளாதாரம்

ஹாங்காங்கின் சர்வதேச வர்த்தகத்தில் தலையிடும். இதனால் ஹாங்காங் தன் நட்பு நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்புள்ளது.கடந்த வாரம் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஹாங்காங் பங்குச்சந்தையான ஹேங் செங் இண்டெக்ஸ்-ல் முதலீடு செய்வதை நிறுத்திக்கொண்டனர்.

இதனால் 2015ம் ஆண்டு ஏற்பட்டது போல வரலாறு காணாத சரிவு (5 சதவீதம்) ஏற்பட்டுள்ளது. அமெரிக்க-சீன தொழில் கவுன்ஸில் அவசர கூட்டம் கூட்டியது. இதில் ஹாங்காங்கை சிறப்பு அந்தஸ்து பெற்ற பொருளாதார நகரம் என்ற பட்டியலில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிவிலக்கு பிற சலுகைகள் அளிக்கப்படாது.

Tags :