Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள்

By: Nagaraj Wed, 12 Oct 2022 11:24:32 AM

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாணை நிலை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விாிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை கைவிட வேண்டும் உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

lecturers,order,from duty,protest,demand ,விரிவுரையாளர்கள், உத்தரவு, பணியில் இருந்து, போராட்டம், கோரிக்கை

இந்த நிலையில் போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்க கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். கவுரவ விரிவுரையாளர்களை போராட்டத்தை கைவிட கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை பயன்படுத்தி கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|