Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை

வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை

By: Karunakaran Fri, 17 July 2020 09:38:18 AM

வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை எற்படுத்தி வருகிறது. வங்களதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வங்களதேசத்தில் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்களதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் வங்களதேசத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

bangladesh,hospital,corona test,certificate ,பங்களாதேஷ், மருத்துவமனை, கொரோனா சோதனை, சான்றிதழ்

இந்நிலையில் வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குனர் முகமது ஷஹீத் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்வதாக அரசிடம் கூறி, பரிசோதனை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு கொரோனா இல்லை என போலியாக சான்றிதல் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வங்காளதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 6 ஆயிரத்து 300 பேருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதல் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்பின், 9 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இந்தியா-வங்காளதேசத்தை இணைக்கும் எல்லையோர ஆற்றின் அருகே மறைந்திருந்த முகமதுவை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :