Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 1,20,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் அதிகளவிலான வெப்பம் பதிவு

கடந்த 1,20,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் அதிகளவிலான வெப்பம் பதிவு

By: vaithegi Fri, 28 July 2023 3:31:39 PM

கடந்த 1,20,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் அதிகளவிலான வெப்பம் பதிவு


இந்தியா:கடந்த 1,20,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலையில் கூடுதல் வெப்பம் ..உலகம் முழுவதும் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் கூடுதல் வெப்பம் இருந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், எந்தாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தமிழக உட்பட அனைத்து மாநிலங்களிலும் கோடை காலங்களில் அதிக அளவில் மழை பொழிந்தும், ஜூன் மற்றும் ஜூலை மாத துவக்கத்தில் கூடுதல் வெப்ப சலனமும் இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து தற்போதும் வழக்கத்திற்கும் மாறாக ஜூலை மாதத்திலேயே கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் சேதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

heat,world ,வெப்பம் ,உலகம்


இந்த நிலையில், கடந்த 1லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் தான் அதிக அளவிலான வெப்பம் பதிவாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி கலந்த தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

இதே போன்று, அடுத்த ஆண்டும் கூடுதலான வெப்பச் சலனம் நிலவலாம் என்றும், நடப்பாண்டு அல்லது அடுத்த ஆண்டு அதிகமான வெப்ப அலை கொண்ட ஆண்டாக பதிவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|