Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தண்ணீர் பிரச்சனை என்றால் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

தண்ணீர் பிரச்சனை என்றால் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

By: Dinesh Tue, 11 Aug 2020 12:07:09 PM

தண்ணீர் பிரச்சனை என்றால் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நம் வாழ்விற்கு மிகவும் முக்கியமான குடிநீரை நாமே விழிப்புணர்வு இல்லாமல் தரத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுகிறோம்.

நிலத்தடி நீர் மாசடையும் காரணங்கள்


மனிதச் செயற்பாடுகளினால் நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வீடுகள், கடைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஆகியவற்றால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

இப்புவியானது 70 சதவீத நீர்பகுதியினை கொண்டுள்ளது. நீரானது உயிரினங்களின் உயிர் வாழ மிகவும் முக்கியமானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரானது மாசுபடும்போது அது நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளை உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படுத்துகின்றது.

நீர் நிலைகளில் கலக்கும் ரசாயன கழிவுகள்


மிதக்கும் ரசாயன கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளால் நீர்நிலைகள் விஷம் நிறைந்தவைகளாக மாறி வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம், நகர்மயமாதல், தொழிற்புரட்சி போன்றவையே நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாகும். இன்றைக்கு நீர் மாசுபாடு பெரிய பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினை உலகினை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது.

water,water issue,dusty water,waste water,water purifier,sewage treatment plant,effluent treatment plant,water treatment plant ,நீர், நீர் பிரச்சினை, தூசி நிறைந்த நீர், கழிவு நீர், நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வெளியேறும் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம்

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நாளும் 2 மில்லியன் டன் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. மாசடைந்த நீரினைப் பயன்படுத்தி மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டும் சில நேரங்களில் உயிரையும் இழக்கின்றனர். இந்தியாவில் மாசடைந்த நீரினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 1000-த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு நோயால் மரணமடைகின்றனர் என்று ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் காரீயம், பாதரசம், கந்தகம், நைட்ரேட் போன்ற விஷத்தன்மையான வேதிப் பொருட்களையும், மாசுபடுத்திகளையும் கொண்டுள்ளன. இவை சரியாக வடிகட்டப்படாமல் நீர்நிலைகளில் அப்படியே விடப்படுகின்றன. இவை நீரின் நிறத்தினையும், தரத்தினையும் மாற்றி அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுபடுத்துகின்றன.

வீட்டுகளில் இருந்து வெளியேறும் சோப்புகள், டிடர்சென்டுகள் கலந்த நீர், மனிதக்கழிவுகள், வாகனங்களைச் சுத்தம் செய்த நீர் போன்றவை சுத்திகரிக்கப்பட்டோ அல்லது சுத்திகரிக்கப்படாமலோ நீர் நிலைகளில் விடப்படுகின்றன. இவை நீரினை மாசுபடுத்துகின்றன. இக்கழிவு நீரிலிருந்து உருவாகும் பாக்டீரியா உயிரினங்களுக்கு பலவித நோய்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும் திடவீட்டுக்கழிவுப் பொருட்களான பிளாஸ்டிக், பேப்பர், இரப்பர், அலுமினியம் போன்றவை நீரில் கலந்து உயிரினங்களுக்கு தீங்கிழைக்கின்றன.

கழிவு நீர் சுத்திகரிப்பு

கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் உபயோகப்படுத்தும் போது நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நிலை குறைகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதும் குறைகிறது. மக்களுக்கு ஏற்படும் நோய்களும் குறைகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு குறித்து மக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இதேபோல் வேளாண்மையில் பயிர் நன்கு செழித்து வளரவும், நோய் தாக்காமல் இருக்கவும் செயற்கை பூச்சி கொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மழையின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால் இவை நீரினை மாசடையச் செய்வதுடன் உயிரினங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.

மாசடைந்த நீரில் உள்ள மாசுபடுத்திகளை நீரில் வாழும் நுண்ணுயிர்கள் உண்ணுகின்றன. அவற்றை உண்ணும் மீன்களின் வழியாக அவை மனிதனை வந்தடைகின்றன. இதனால் நோய்கள் ஏற்படுவதோடு உயிரிழப்பும் ஏற்படுகிறது. மாசடைந்த நீரினை சரிவர சுத்திகரிக்காமல் பயன்படுத்துவதாலோ மாசடைந்த நீரினைப் பயன்படுத்துவதாலோ டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உண்டாகின்றன. இவ்வாறு மனிதன் இம்மாசுபாட்டினால் நேரடியாக பாதிப்படைகின்றான்.

நீர் மாசுபாட்டால் ஏற்படும் மறைமுக விளைவுகள்

மாசடைந்த நீரில் வளரும் மீன்கள், நண்டுகள் ஆகியவற்றை உண்ணுவதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள், தோல் நோய்கள் ஏற்படுகின்றன. இது நீர் மாசுபாட்டினால் ஏற்படும் மறைமுக விளைவு ஆகும். நீர் மாசுபாடு ஏற்படக் காரணங்கள் மற்றும் அதன் விளைவுக‌ள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அன்றாட மனித செயல்பாடான குளித்தல், துவைத்தல் போன்றவற்றிற்கு அளவான நீரினைப் பயன்படுத்துதல் என்பதனை எல்லோரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். அளவோடு நீரினைப் பயன்படுத்துவதால் கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் அளவு குறைவதுடன் நீர் பற்றாக்குறையும் சமாளிக்கலாம். நீர்நிலைகளில் தொழிற்சாலைகளில் கொட்டப்படும் கழிவுகள் சரியான முறையில் சுத்தரிக்கப்பட்டு பின் நீர்நிலைகளில் விடப்பட வேண்டும்.

water,water issue,dusty water,waste water,water purifier,sewage treatment plant,effluent treatment plant,water treatment plant ,நீர், நீர் பிரச்சினை, தூசி நிறைந்த நீர், கழிவு நீர், நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வெளியேறும் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம்

நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்

நீர் நிலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரினைக் கொட்டுவதை தடுத்து நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நோயற்ற வாழ்வு வாழ முடியும். கழிவு நீரை முழுமையாக சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த முடியும். இதனால் எவ்வித கெடுதலும் இல்லை என்பது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எழும்போது நோய்கள் மக்களை விட்டு வெகு தூரத்தில் சென்று விடும். அதேபோல் தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
தண்ணீர் பற்றிய அனைத்துவிதமான ஆலோசனைக்கு : 98407 00537

Tags :
|