Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? .. தனியார் அறக்கட்டளை நிறுவனம் கருத்து கணிப்பு

உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? .. தனியார் அறக்கட்டளை நிறுவனம் கருத்து கணிப்பு

By: vaithegi Sat, 20 Aug 2022 05:41:41 AM

உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? ..  தனியார் அறக்கட்டளை நிறுவனம் கருத்து கணிப்பு

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாகவே போர் தொடுத்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் பல கிளம்பின.

மேலும் போர் தொடங்கிய சமயத்தில் ரஷியா முழுவதும் மிக பெரிய அளவில் போராட்டங்கள் பல வெடித்தன. ஆனாலும் அந்த போராட்டம் அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.

russian president putin,influence,opinion poll ,ரஷிய அதிபர் புதின்,செல்வாக்கு , கருத்து கணிப்பு

இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் 77 சதவீதம் பேர் அதிபர் புதினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே புதினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

எனவே அதன்படி மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புதினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும், 9 சதவீம் பேர் உறுதியாக தெரியவில்லை என கூறியதாகவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Tags :