Advertisement

2023ல் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா

By: vaithegi Mon, 19 Dec 2022 4:30:17 PM

2023ல் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா

சென்னை: தமிழகத்தில் 2022-2023ம் ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. ஆனாலும் அண்மையில் பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 2023ம் ஆண்டுக்கான மாநில அரசு விடுமுறை குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. எனவே அதன்படி அடுத்த ஆண்டில் 23 நாட்கள் அரசினர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது பள்ளிகளுக்கும் அளிக்கப்படும்.

vacation,school ,விடுமுறை,பள்ளி

மேலும் பொதுவாகவே பள்ளிகளுக்கு இதை தவிர காலாண்டு தேர்வு விடுமுறையாக அக்டோபர் மாதத்தில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும். இதே போன்று அரையாண்டு தேர்வு விடுமுறையாக டிசம்பர் மாதத்தில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும்.

இதை தொடர்ந்து, முழு ஆண்டு தேர்வு விடுமுறையாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 1 மாதம் வரை விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அத்துடன் பருவமழை காரணமாகவும் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். எனவே இதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டில் (2023) கிட்டத்தட்ட 70 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :