Advertisement

தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

By: vaithegi Tue, 18 Oct 2022 3:40:35 PM

தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

சென்னை: கல்வி மற்றும் வேலை காரணமாக தற்போதைய சூழலில் பலரும் சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் பண்டிகை போன்ற முக்கிய விசேஷ தினங்களுக்கு மட்டும் தான் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகை தான் மிக முக்கிய பண்டிகையாக தமிழகம் உள்பட அனைத்து இந்திய மாநிலங்களிலும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்த எதிர்பார்ப்பு ஆண்டு தோறும் அதிக அளவில் இருக்கும்.

diwali,holiday ,தீபாவளி,விடுமுறை

குறிப்பாக, இந்த வருடம் அக்டோபர் 24ம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வர உள்ளது. எனவே, தீபாவளிக்கு விடுமுறை எப்படி அளிக்கப்பட இருக்கிறது என பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வரை அனைவரும் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக அக்டோபர் 22ம் தேதியாகிய சனிக்கிழமை முதல் அக்டோபர் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags :
|