Advertisement

தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை ?

By: vaithegi Sun, 29 Oct 2023 11:31:20 AM

தீபாவளிக்கு எத்தனை நாள் விடுமுறை ?

தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு குறைவான நாட்கள் நாள் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ...தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இம்மாதத்தில் தொடர்ந்து விடுமுறை வருவதால் பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி கொண்டு வருகின்றனர்.

அதாவது, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து கடந்த அக்.9 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அக்.3 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.

holiday,diwali ,விடுமுறை ,தீபாவளி

இதனை தொடர்ந்து, இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகையும் வரவிருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் அதிகபட்சமாக 2 நாள் தான் விடுமுறை இருக்கலாம் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு இடையே, தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பினை ஓரிரு நாட்களில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :