Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

By: Monisha Mon, 11 July 2022 9:38:22 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

தமிழ்நாடு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்தியது. மேலும், கொரோனா பரவல் விரைவில் கட்டுக்குள் வந்த நிலையில், கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்கப்பட்டன.

இந்தியாவில் BA.2.75 என்ற புதிய ஓமிக்ரான் வகை கண்டறியப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். உலக சுகாதார அமைப்பும் கூட BA.2.75 கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் இந்த BA.2.75 ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

government,employees,corona,off ,ஓமிக்ரான்,கொரோனா,இஸ்ரேல், 
 விடுமுறை,

இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிக்கையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்புத் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.

மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், அதற்கான அறிவிப்பைச் சமர்ப்பித்தால், அவர்களுக்கும் சிறப்புத் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|