Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்களை ரத்து செய்ய எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? - ராகுல்காந்தி கேள்வி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? - ராகுல்காந்தி கேள்வி

By: Karunakaran Sun, 13 Dec 2020 10:46:11 AM

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? - ராகுல்காந்தி கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். விவசாயிகளில் இந்த போராட்டம் 17-வது நாளை நேற்று எட்டியது. தற்போது, இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்த பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

farmers,sacrifice,agricultural laws,rahul gandhi ,விவசாயிகள், தியாகம், விவசாய சட்டங்கள், ராகுல் காந்தி

இதேபோன்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில், 17 நாட்களில் 11 விவசாயி சகோதரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். மோடி அரசு பின்வாங்கவில்லை. அவர்கள் இன்னும் தங்களுக்கு பணம் தருவோருடன் உள்ளனரே தவிர உணவு தருவோருடன் நிற்கவில்லை. இதுதான் ராஜ தர்மமா? என கேட்டுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இருப்பினும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என உறுதியாக தெரிவித்து வருகிறது.

Tags :