Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு நீட்டிப்பு...திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம்?

ஊரடங்கு நீட்டிப்பு...திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம்?

By: Monisha Fri, 31 July 2020 1:58:12 PM

ஊரடங்கு நீட்டிப்பு...திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம்?

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன் கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

curfew,marriage,corona virus,mask,social space ,ஊரடங்கு,திருமணம்,கொரோனா வைரஸ்,முகக்கவசம்,சமூக இடைவெளி

இந்நிலையில் திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதில், திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறையே ஆகஸ்ட் 31-ந் தேதி வரை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|