Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்... பசுமை பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

தீபாவளியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்... பசுமை பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

By: Monisha Mon, 09 Nov 2020 08:57:44 AM

தீபாவளியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்... பசுமை பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க பல மாநிலங்களில் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் பசுமை பட்டாசுகள் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் தெரியவில்லை.

சாதாரண பட்டாசுகளில் லிதியம், பேரியம் போன்ற ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் பசுமை பட்டாசுகளில் இந்த ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவது இல்லை. இதனால் 30 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மாசு ஏற்படுவது குறைகிறது. அதே நேரத்தில் ஒளி மற்றும் ஒலியில் பெரிதாக எந்த வேறுபாடும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் பசுமை பட்டாசுகளின் பாக்கெட் மீது முத்திரை, கியூ.ஆர்.கோடு ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.

diwali,fireworks,chemicals,pollution,market ,தீபாவளி, பட்டாசு,ரசாயன பொருட்கள்,மாசு,சந்தை

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், "பசுமை பட்டாசுகள் பல மாநிலங்களில் இன்னும் சந்தைக்கு வரவில்லை. பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள், இந்த பசுமை வகை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த பசுமை பட்டாசுகள் கடந்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டவை என்பதால், சந்தைக்கு அதிகமாக வரவில்லை என்று கூறுகிறார்கள்.

Tags :
|