Advertisement

குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதார் எடுப்பது

By: vaithegi Sun, 24 Sept 2023 1:38:20 PM

குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதார் எடுப்பது

இந்தியா: இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தனித்துவ 12 இலக்க ஆதார் எண்களை வழங்கிவுள்ளது. அரசு பணி மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகவுள்ளது.

இதையடுத்து புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குழந்தைகள் பிறந்தவுடன் இவர்களுக்கான ஆதார் அட்டையை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

aadhaar,child ,ஆதார் ,குழந்தை

ஆதார் அட்டை பெறுவதற்கு 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழோடு சான்றிதழோடு அருகில் உள்ள ஆதார் மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சான்றிதழை வைத்து குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுத்துக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை எடுப்பது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது ஆகிய பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும்போது பயோமெட்ரிக், கைரேகைகள் மற்றும் கண் விழித்திரை ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. ஆதார் அட்டை எடுப்பதற்கு எவ்விதமான வயது வரம்புகளும் கிடையாது.

Tags :