Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாதாரண ஜலதோஷத்திற்கும், கொரோனாவுக்கும் வேறுபாடு காண்பது எப்படி?

சாதாரண ஜலதோஷத்திற்கும், கொரோனாவுக்கும் வேறுபாடு காண்பது எப்படி?

By: Karunakaran Thu, 20 Aug 2020 3:02:55 PM

சாதாரண ஜலதோஷத்திற்கும், கொரோனாவுக்கும் வேறுபாடு காண்பது எப்படி?

மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் குணமாகிவிடும். சாதாரண காலத்தில் ஜலதோஷம் வந்தால் மூக்கடைத்து விடும். வாசனை தெரியாது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறியும் ஜலதோஷம் போன்றே உள்ளது.

ஜலதோஷம் போலவே கொரோனாவுக்கும் வாசனை இழப்பும், சுவை இழப்பும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இதனால் வாசனையும், சுவையும் இழக்கிறபோது அதை சாதாரண ஜலதோஷம் என எடுத்துக்கொள்வதா அல்லது கொரோனா என கருதுவதா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி உள்ளனர்.

corona virus,corona infections,corona death,cold ,கொரோனா வைரஸ், கொரோனா நோய்த்தொற்றுகள், கொரோனா மரணம், ஜலதோஷம்

இதுகுறித்து விஞ்ஞானிகளில் ஒருவரான காரல் பில்போட் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் முக்கிய அடையாளம், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகும். இருப்பினும் இது மோசமான ஜலதோஷம் இருப்பதற்கான பொதுவான அறிகுறியும் ஆகும். கொரோனா மற்றும் சாதாரண ஜலதேஷம் இவ்விரண்டுக்கும் உள்ள வாசனை, சுவை இழப்புக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கண்டறிவதுதான் எங்கள் ஆய்வின் நோக்கமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வில், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகப்படியான எதிர்வினைக்கு அதாவது சைட்டோகைன் புயலுக்கும், நரம்பு மண்டல பாதிப்புக்கும் ஆளாக்கப்பட்டது. இதில், மற்றவர்களை ஒப்பிடுகிறபோது, கொரோனா நோயாளிகளிடம் வாசனை இழப்பு என்பது மிக மோசமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான சுவை இழப்பு. இதுதான் கொரோனா நோயாளிகளுக்கும், சாதாரண ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Tags :