Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த இரண்டு அண்டங்கள் நெருங்கும் புகைப்படம் வைரல்

ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த இரண்டு அண்டங்கள் நெருங்கும் புகைப்படம் வைரல்

By: Nagaraj Wed, 05 Oct 2022 11:52:39 AM

ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த இரண்டு அண்டங்கள் நெருங்கும் புகைப்படம் வைரல்

நியூயார்க்: விண்வெளியில் இரு அண்டங்கள் நெருங்கும் புகைப்படத்தை நாசா மற்றும் இஎஸ்ஏ-வின் ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த படம் தற்போது இணையத்தில் அதிக வைரலாகி வருகிறது.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, டிஸ்கவரி என்ற ராக்கெட் உதவியுடன், ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கியானது அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவானது.

scientists,gravity,hubble telescope,space,photography ,விஞ்ஞானிகள், ஈர்ப்பு விசை, ஹப்பிள் தொலைநோக்கி, விண்வெளி, புகைப்படம்

இது விண்வெளியில் நிகழும் மாற்றங்களை புகைப்படம் எடுத்து அவ்வப்போது பூமிக்கு அனுப்பி வருகிறது. இதன் மூலம், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள சூரிய குடும்பத்தையும் அண்டத்திற்கு வெளியே உள்ள அண்டங்களையும் புகைப்படம் எடுக்கும் வல்லமை கொண்டது. ஹபிளின் சாதனையாக அண்டம் விரிவடைவதை காண்பித்தது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் ஹப்பிள் தொலைநோக்கியானது, விண்வெளியில் இரு அண்டங்கள் அருகே இருப்பது போன்ற புகைப்படத்தை கச்சிதமாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில் இரு அண்டங்களும் விண்வெளியில் மிதப்பது போன்ற காட்சி அளிக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், இரு அண்டங்களும் அவற்றின் ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று ஈர்த்து கொள்கின்றன என தெரிவித்துள்ளனர்.

Tags :
|