Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க மரத்தை கட்டிப்பிடியுங்கள் - இஸ்ரேல் அதிகாரி

உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க மரத்தை கட்டிப்பிடியுங்கள் - இஸ்ரேல் அதிகாரி

By: Karunakaran Tue, 14 July 2020 11:39:13 AM

உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க மரத்தை கட்டிப்பிடியுங்கள் - இஸ்ரேல் அதிகாரி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்கனை தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறத்தப்படுகிறது.

இந்நிலையில், தமக்கு மிகவும் வேண்டியவர்களிடம் அன்பைக்காட்ட அவர்களை கட்டிப்பிடிக்கவோ, கைக்கொடுக்கவோ, அருகில் நின்ற பேசவோ முடியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

israel,hug the tree,coronavirus,park ,இஸ்ரேல், மரத்தை கட்டிப்பிடி, கொரோனா வைரஸ், பூங்கா

இந்நிலையில் இஸ்ரேல் பூங்கா அதிகாரி ஒருவர் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர மக்கள் பூங்காவிற்குச் சென்ற அங்குள்ள மரங்களை கட்டிப்பிடித்து அன்பபை வெளிப்படுத்துங்கள், மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் என பிரச்சாரம் செய்து வருகிறது. உலக மக்களும் இதை செய்யுங்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இஸ்ரேல் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அப்போலோனியா தேசிய பூங்காவில் அதிகாரிகளின் மார்க்கெட்டில் டைரக்டராக உள்ள ஒரிட் ஸ்டென்பெல்டு, ‘இந்த விரும்பத்தகாத கொரோனா வைரஸ் காலத்தில் இயற்கையான வெளி இடத்திற்குச் செல்லுங்கள், மூச்சை நான்றாக இழுத்து விடுங்கள், ஒரு மரத்தை கட்டிப்பிடித்து உங்கள் அன்பை வெளிப்படுத்தவும், அன்பைப் பெறவும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Tags :
|