Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய செயலிகளின் டவுன்லோடு பயனர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு

இந்திய செயலிகளின் டவுன்லோடு பயனர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு

By: Karunakaran Thu, 16 July 2020 09:01:30 AM

இந்திய செயலிகளின் டவுன்லோடு பயனர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு

லடாக் பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின், சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்தன.

பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்தது. குறிப்பாக டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அதன் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

indian processors,tiktok,download,users ,இந்திய செயலிகள், டிக்டோக், பதிவிறக்கம், பயனர்கள்

தற்போது இந்தியாவில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு உள்நாட்டு பொழுதுபோக்கு செயலிகள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோபோசோ, ஷேர்சாட் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் தங்களது சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு நிறுவனங்களான ஷேர்சாட், சிங்காரி, ரொபோசோ, செயலிகள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ரோபோசோ நிறுவனர் நவீன் திவாரி கூறுகையில் கூறுகையில், டிக்டாக் தடை செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது செயலியில் புதிதாக 5 லட்சம் பேர் இணைந்துவிட்டனர். இந்த மாத இறுதிக்குள் 10 கோடி பேர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Tags :
|