Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரமாண்ட உட்கட்டமைப்பு திட்டத்தில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு... பிரான்ஸ் அறிவிப்பு

பிரமாண்ட உட்கட்டமைப்பு திட்டத்தில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு... பிரான்ஸ் அறிவிப்பு

By: Nagaraj Mon, 10 Oct 2022 10:12:38 PM

பிரமாண்ட உட்கட்டமைப்பு திட்டத்தில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு... பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ்: இந்தியாவில் அதிகளவில் முதலீடு... வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகளுடன் இணைக்கும் வகையிலான பிரமாண்ட உட்கட்டமைப்பு திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படும் என, பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரான்ஸ் இடையேயான உறவு எப்போதும் சிறப்பாகவே உள்ளதென்றும் இந்தியாவின் முக்கியத்துவத்தை தாங்கள் உணர்ந்துள்ளோம் என்றும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர் இமானுவேல் லீனாயின் தெரிவித்துள்ளார்.

france,announcement,india,more investment,development works ,பிரான்ஸ், அறிவிப்பு, இந்தியா, அதிகளவு முதலீடு, மேம்பாட்டு பணிகள்

இந்தோ – பசிபிக் பிராந்தியம் தொடர்பாக இந்தியாவின் நிலையை ஆதரிப்பதாவும் இதை, ஏற்கனவே பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்கே திட்டத்தின் வாயிலாக, பல நாடுகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இதில் மிகப் பெரிய அளவுக்கான முதலீடுகள் இந்தியாவில் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|