Advertisement

வளைகுடா சிறையில் இருந்த மனித உரிமை ஆர்வலர் விடுதலை

By: Karunakaran Thu, 11 June 2020 2:24:48 PM

வளைகுடா சிறையில் இருந்த மனித உரிமை ஆர்வலர் விடுதலை

மனித உரிமை ஆர்வலர் நபீல் ரஜாப்க்கு 55 வயதாகிறது. இவர் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவர் கடந்த 2016-ம் ஆண்டு வளைகுடா நாடான பஹ்ரைனில்கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நபீல் ரஜாப் நடத்தப்படும் விதத்துக்கு மனித உரிமை குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

ஐ.நா. குழு அவரை விடுதலை செய்யவேண்டுமென அழைப்பு விடுத்தது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தை அவர் காவலில் வைக்காத அமைப்பில் கழிப்பார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

bahrain,prison,human rights activistm,nabeel rajab ,வளைகுடா, சிறை,விடுதலை,மனித உரிமை ஆர்வலர்,நபீல் ரஜாப்

தண்டிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக்காலத்தை காவல் அற்ற அமைப்பில் கழிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் நபீல் ரஜாப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிரபலம் நபீல் ரஜாப் ஆவார். பஹ்ரைனில் 2011-ல் நடந்த ஜனநாயக சார்பு எழுச்சி போராட்டத்தில் நபீல் ரஜாப் கலந்து கொண்டார்.

தண்டிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக்காலத்தை காவல் அற்ற அமைப்பில் கழிக்க வகை செய்யும் சட்டம் பஹ்ரைனில் 2018-ம் ஆண்டு இயற்றப்பட்டசட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிரபலம், நபீல் ரஜாப்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
|