Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அம்பான் புயலால் வெயில் அளவு அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை

அம்பான் புயலால் வெயில் அளவு அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை

By: Nagaraj Mon, 18 May 2020 11:45:32 AM

அம்பான் புயலால் வெயில் அளவு அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை

அலற அடிக்க காத்திருக்கும் "அம்பான்" புயல் காரணமாக மத்திய மற்றும் வட மாவட்டங்களில் வெயில் அளவு அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அதிகரிக்கலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது;

storm alert,vail size,amban storm,tanjore,thiruvarur ,புயல் எச்சரிக்கை, வெயில் அளவு, அம்பான் புயல், தஞ்சை, திருவாரூர்

வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்' புயல், நேற்று, தீவிர புயலாக சுழன்றது. இந்நிலையில் இன்று அதி தீவிர புயலாக, அம்பான் வலுப்பெறும் நிலையில் உள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்கம் இடையில் வரும் 20ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பான் புயலால் நிலப் பகுதிக்குள் ஈரப்பதம் மிகுந்த கடற்காற்று வருவது தடைபட்டுள்ளது. காற்றின் ஈரப்பதம், புயலால் உறிஞ்சப்படும் என்பதால் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின், மத்திய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில், இன்றும், நாளையும், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரித்து காணப்படும்.

இன்று கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், தஞ்சை, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.

நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :