Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கிய கோனி புயல்

பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கிய கோனி புயல்

By: Karunakaran Mon, 02 Nov 2020 09:09:28 AM

பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கிய கோனி புயல்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபார்ஷன், மிமரோபா, விசயாஸ் ஆகிய பிராந்தியங்களை ‘மோலேவ்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கியது. இந்த புயல் அந்த பகுதியில் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக 22 பேர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிலிப்பைன்சை நேற்று மேலும் ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. கோனி என்ற அந்த புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. கேடண்டுவானஸ் மாகாணத்தில் இந்தப் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் தொடங்கி 280 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

hurricane goni,eastern regions,philippines,heavy rain ,கோனி சூறாவளி, கிழக்கு பகுதிகள், பிலிப்பைன்ஸ், பலத்த மழை

இந்த புயலால் மின் கம்பங்களும் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்ததால், நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பிலிப்பைன்சை இந்தாண்டு தாக்கிய புயல்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும் சுமார் 10 லட்சம் மக்கள் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :