Advertisement

டெக்சாஸ் மாநிலத்தை புரட்டி போட்ட ஹன்னா சூறாவளி

By: Nagaraj Tue, 28 July 2020 3:33:23 PM

டெக்சாஸ் மாநிலத்தை புரட்டி போட்ட ஹன்னா சூறாவளி

சூறாவளியால் கடும் சேதம்... அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான இந்த சூறாவளி டெக்சாஸ் நகரை தாக்கிய போது 30சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அந்த மாநிலம் முழுவதும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

hurricane,strong wind,floodplain,trees,road ,சூறாவளி, பலத்த காற்று, வெள்ளக்காடு, மரங்கள், சாலை

சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆறுகளில் எல்லாம் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடியது. மேலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை சாலையில் விழுந்து கிடந்தன. இந்த சூறாவளிக்கு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இப்படி ஒரு இயற்கை இடர்பாட்டை சந்திக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

Tags :
|