Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத்- பெங்களூரு அணி மோதல்

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத்- பெங்களூரு அணி மோதல்

By: Nagaraj Mon, 21 Sept 2020 8:01:02 PM

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத்- பெங்களூரு அணி மோதல்

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது போட்டியாக இன்று வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

hyderabad team,bangalore,batting,ipl series ,ஹைதராபாத் அணி, பெங்களூரு, பேட்டிங், ஐபிஎல் தொடர்

இந்த நிலையில் இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஹைதராபாத் 7 முறையும், பெங்களூா் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஓா் ஆட்டம் டையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது. இதனால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தது. தற்போது வரை பெங்களூரு அணி 30 ரன்கள் எடுத்துள்ளது.

Tags :