Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

By: Monisha Tue, 26 May 2020 4:09:56 PM

ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா தடுப்பு மருந்தான “ஹைட்ராக்சி குளோரோ குயின்” மாத்திரை நல்ல பலனை அளித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து உலக அளவில் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரை தேவை அதிகரித்தது. இதற்கிடையே கொரோனா சிகிச்சையில் மலேரியா தடுப்பு மாத்திரை பலன் அளிக்கவில்லை என்று சில ஆய்வுகளிலும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் லான் கேட் மருத்துவ ஆய்வுகள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா சிகிச்சையில் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரை பாதுகாப்பானது அல்ல என்றும் இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தது.

hydroxychloro queen tablet,world health organization,lawn gate medical studies,malaria prevention ,ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரை,உலக சுகாதார அமைப்பு,லான் கேட் மருத்துவ ஆய்வுகள்,மலேரியா தடுப்பு மருந்து

இந்த நிலையில் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரையை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் தேட்ராக்ஸ் கூறியதாவது:-

“பல நாடுகளில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் மருத்துவ பாதுகாப்பு கருதி மலேரியா தடுப்பு மாத்திரை பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையில் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரிய வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Tags :