மக்கள் குறைகளை தீர்க்கவே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறேன்
By: Nagaraj Thu, 13 Oct 2022 09:38:08 AM
இலங்கை: மக்கள் குறைகளை தீர்க்கவே அங்கம் வகிக்கிறேன்... பொது மக்களது குறை நிறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கடற் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் மகாவித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மண்ணெண்ணை பிரச்சினையானது நாடு
தளுவிய ரீரியில் காணப்படுகிறது அதனை தீர்ப்பதற்காக தனியார் துறையிடம் தாம்
கதைத்து வருவதாகவும் அது தொடர்பில் விரைவில் முடிவுகள் எட்டப்படும் என
தெரிவித்தார்.
மேலும் திருகோணமலையினை
பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள் மக்களது
பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதால் ஒருபோதும் பொது மக்களது
பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் அரசியல் செய்ய
ஏதேனும் பிரச்சினைகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.