Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன வைரஸை கட்டுப்படுத்த கடுமையாக போராடுகிறேன்; அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவு

சீன வைரஸை கட்டுப்படுத்த கடுமையாக போராடுகிறேன்; அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவு

By: Nagaraj Mon, 27 July 2020 4:19:46 PM

சீன வைரஸை கட்டுப்படுத்த கடுமையாக போராடுகிறேன்; அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவு

சீன வைரஸை கட்டுப்படுத்த நான் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இதன் விளைவாக, இரு நாடுகளும் தூதரகங்களை மூடி மூடி விளையாடிக் கொண்டிருக்கின்றன. உளவு வேளையில் ஈடுபட்டதாக கூறி டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகர சீன தூதரகத்தை மூட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட, இதற்கு பதிலடியாக செங்குடு நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டது சீனா.

முன்னதாக, உலகத்தில் கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி குற்றம் சாட்டி வந்தார். அதோடு, சீன வைரஸ் என்றே கொரோனா வைரஸை டொனால்ட் டிரம்ப் குறிப்பிடுவதும் வழக்கம். இதற்கு, சீனா கண்டனம் தெரிவித்தும் டிரம்ப் தன் பேச்சை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், சீன வைரஸ் என்ற வார்த்தை பதத்தை மீண்டும் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியிருப்பது சீனாவை கடும் ஆத்திரத்துக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் மேஜர் லீக் பேஸ்பால் போட்டிகள் கடந்த வாரம் மீண்டும் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் இல்லாத வெற்று மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

president trump,chinese virus,struggle,new york,baseball ,அதிபர் டிரம்ப், சீன வைரஸ், போராட்டம், நியூயார்க், பேஸ்பால்

வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறவுள்ள போட்டியில் நியூயார்க் யாங்கீஸ் அணி பாஸ்டன் ரெட் சாக்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் முதல் பந்தை வீச வருமாறு யாங்கீஸ் அணியின் தலைவர் ரேன்டி லெவின் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் , ''தற்போது சீன வைரஸை கட்டுப்படுத்த நான் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறேன். மருத்து கண்டுபிடிப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்துவது என தொடர்ச்சியான கூட்டங்கள் இருப்பதால் ஆகஸ்ட் 15- ந் தேதி நியூயார்க் வர முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த சீசனில் வேறு ஏதாவது நாளில் சந்திப்போம் '' என்று கூறியுள்ளார்.

சில நாள்களுக்கு முன், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இளவயது வீரர்களுடன் பேஸ்பால் விளையாடுவது போன்ற வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags :