Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளேன் ... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளேன் ... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

By: vaithegi Mon, 15 Aug 2022 3:56:27 PM

கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளேன் ...  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

சென்னை: இந்தியா நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று பெரும் உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் 2-வது ஆண்டாக தேசியக்கொடியை ஏற்றினார்.

m. g. stalin,independence day ,மு.க.ஸ்டாலின், சுதந்திர தினம்

இதனை அடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது,

'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்! தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, 75-வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :