Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என நான் கூறவில்லை - ராகுல் காந்தி விளக்கம்

காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என நான் கூறவில்லை - ராகுல் காந்தி விளக்கம்

By: Karunakaran Mon, 24 Aug 2020 4:40:56 PM

காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என நான் கூறவில்லை - ராகுல் காந்தி விளக்கம்

புதிய காங்கிரஸ் தலைவர் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் காணொலி மூலம் பங்கேற்றுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பாஜவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளது என குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கபில் சிபல், கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவிற்கு ஆதரவாக ஒரு கருத்து கூட கூறியதில்லை. ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டோம் என்று கூறியுள்ளார்.

congress leaders,bjp,rahul gandhi,congress party ,காங்கிரஸ் தலைவர்கள், பாஜக, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி

இதுகுறித்து ராகுல் காந்தி விளக்கமளிக்கையில், காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என தான் கூறவில்லை என்று கூறினார். பின்னர் அவர் மீதான தனது குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் திரும்பப் பெற்றார்.

மேலும் இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில், பாஜகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டதாக ராகுல் காந்தி பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் ராகுல் காந்தி, பாஜவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளது எனக்கூறிய தகவல் தவறானது என தெரிய வந்தது.

Tags :
|