Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கி தொடங்கி உள்ளேன்; நித்தியானந்தாவின் செம அதிரடி அறிவிப்பு

வங்கி தொடங்கி உள்ளேன்; நித்தியானந்தாவின் செம அதிரடி அறிவிப்பு

By: Nagaraj Thu, 13 Aug 2020 10:53:57 AM

வங்கி தொடங்கி உள்ளேன்; நித்தியானந்தாவின் செம அதிரடி அறிவிப்பு

கைலாசா நாட்டில் வங்கி தொடங்க உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. சில வழக்குகளில் கைதாகும் நிலையில் இருந்தவர் இந்தியாவிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் கைலாசா நாடு அமைக்க போவதாக கூறிக்கொண்டு 2018 ஆம் ஆண்டிலிருந்து தனது சீடர்களுடன் தலைமறைவாக உள்ளார்.

ஆனால் யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இடையே கைலாசா நாட்டை தொடங்கி உள்ளேன் என்றும் அறிவித்து வீடியோக்கள் வெளியிட்டார். கொரோனா அச்சுறுத்தல் லாக்டவுன் நேரத்தில் கூட கைலாசாவில் எந்த அச்சமும் இல்லை. எங்களுக்கு லாக்டவுனும் இல்லை என்று கூறி நித்தியானந்தாவின் சீடர்கள் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு அலப்பறை செய்தனர்.

nittiyananta. bank,vatican,law,currency,notice ,நித்தியானந்தா. வங்கி, வாடிகன், சட்டம், கரன்சி, அறிவிப்பு

இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்கு செலவிட வங்கி தொடங்கி உள்ளேன்.

வாடிகன் வங்கியை முன் மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதாரக் கொள்கையும் தயாராக உள்ளது. கைலாசா நாட்டிற்கான பணம் அச்சடிக்கப்பட்டு விட்டது. விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உள்நாட்டிற்கு ஒரு கரன்ஸி, வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்க தயாராகிவிட்டது.

ரிசர்வ் வங்கி ஆப் கைலாசா சட்டத்தின் படியே தொடங்கப்பட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார். நித்யானந்தாவின் இந்த அதிரடி அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் என்னதான்பா நடக்குது இந்த உலகத்திலே என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Tags :
|