Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்ய அதிபருக்கு போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

ரஷ்ய அதிபருக்கு போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 22 Mar 2023 11:42:12 PM

ரஷ்ய அதிபருக்கு போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுக்கு போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் மீது ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதால், பலர் அகதிகளாக வெளியேறினர்.

நேட்டோ நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பல நாடுகள் போர் நிறுத்தத்திற்காக ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்து வருகின்றன.

china,ukraine,war , பயணம், புத்தி, ரஷ்யா, போர், நிறுத்தம், சீனா

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.அங்கு போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், “உக்ரேனிய நகரங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்தவும், போர்க்குற்றங்களை நிறுத்தவும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெறவும் சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று நம்புகிறோம்” என்றார்.

ஆனால் மாறாக உக்ரைனின் பகுதிகளுக்குள் ரஷ்ய படைகளை விட்டு வைக்கும் வெறும் போர் நிறுத்த அழைப்புகளை சீனா மேற்கொள்ளும் என்றும், படைகளை அகற்றாத போர் நிறுத்தம் ரஷ்யாவுக்கு சட்டவிரோத வெற்றியையே தரும் என்றும் கவலைக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|