Advertisement

உங்களை பார்க்க முடியலை; ரஜினி ரசிகையின் கதறல் வீடியோ

By: Nagaraj Sat, 12 Dec 2020 3:26:11 PM

உங்களை பார்க்க முடியலை; ரஜினி ரசிகையின் கதறல் வீடியோ

உங்களை பார்க்க முடியலை என்று கூறி ரஜினி வீட்டு முன்பு ரசிகை ஒருவர் அழும் வீடியோ இணையத்தில் வெகுவேகமாக பரவி வருகிறது.

கோடிக்கணக்கான ரசிகர்களை தனது தனித்துவமான ஸ்டைலால், கவர்ந்து அவர்களது மனதில் குடி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளைகொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

rajini sir,i was waiting for a long time,crying,fan ,ரஜினி சார், ரொம்பநாள், அழுகை, ரசிகை, காத்திக்கிட்டு இருந்தேன்

இந்நிலையில் போயஸ் கார்டனில் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை பல்வேறு பெண்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது திடீரென பெண் ஒருவர் கதறி அழுது, சூப்பர் ஸ்டார் ரஜினி சார்.. உங்களை பார்க்கணும்னு ரொம்பநாள் காத்திக்கிட்டு இருந்தேன்.. உங்களை பார்க்க முடியலை.. விட மாட்டேங்கிறாங்க சார்.. என கதறி அழுதுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

Tags :
|