Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அது எனக்கு தெரியாது... பாஜ மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தகவல்

அது எனக்கு தெரியாது... பாஜ மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தகவல்

By: Nagaraj Mon, 12 Dec 2022 10:17:48 PM

அது எனக்கு தெரியாது... பாஜ மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தகவல்

பாகல்கோட்டை: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் குஜராத் மாதிரியில் பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்களா? என்பது எனக்கு தெரியாது என்று ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் குஜராத் மாதிரியில் பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்களா? என்பது எனக்கு தெரியாது. வேட்பாளர்கள் இப்படி தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று உங்களுக்கு யாராவது கூறினார்களா?.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாக தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. குஜராத்தில் உள்ளூர் நிலைக்கு ஏற்ப அந்த வியூகம் வகுக்கப்பட்டது.

Tags :