Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வலுவான போர்வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான் என்பதை போன்று உணர்ந்தேன் - சச்சின் பைலட்

வலுவான போர்வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான் என்பதை போன்று உணர்ந்தேன் - சச்சின் பைலட்

By: Karunakaran Fri, 14 Aug 2020 5:17:49 PM

வலுவான போர்வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான் என்பதை போன்று உணர்ந்தேன் - சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசியலில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். பல காங்கிரஸ் தலைவர்கள் சமரசம் செய்தும் சச்சின் பைலட்டுடன் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி சமரசம் செய்ய சுமார் ஒரு மாதத்திற்குப்பின், சச்சின் பைலட் அசோக் கெலாட் உடன் சேர்ந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியபோது, சச்சின் பைலட் அவைக்கு வந்தார். அப்போது முதல்வர் அருகில் போடப்பட்டிருந்த அவரது இருக்கை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அமர்ந்து இருக்கும் மேஜை அருகில் மாற்றப்பட்டது.

strong warrior,border,sachin pilot,rajastan ,வலுவான போர்வீரன், எல்லை, சச்சின் பைலட், ராஜஸ்தான்

இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில், நான் சட்டசபைக்குள் வந்தபோது, என்னுடைய இருக்கை மாற்றப்பட்டதை கண்டேன். ஏன் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தற்போது அந்த சீட்டில் இருக்கும்போது அது பாதுகாப்பானது என்று உணர்ந்தேன். தற்போது நான் எதிர்க்கட்சிகளுக்கு அடுத்து உள்ளேன் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த சம்பவத்தை நான் எல்லைக்கு அனுப்பட்டுள்ளேன். ஏனென்றால், தைரியமான மற்றும் வலுவான போர்வீரன்தான் எல்லைக்கு அனுப்பப்படுவான் என்பதை போன்று உணர்ந்தேன். எங்கள் கவசம் மற்றும் ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

Tags :
|