Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேவர் மகன் படத்தின் ஸ்க்ரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்தேன் - கமலஹாசன்

தேவர் மகன் படத்தின் ஸ்க்ரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்தேன் - கமலஹாசன்

By: Monisha Sat, 13 June 2020 11:59:35 AM

தேவர் மகன் படத்தின் ஸ்க்ரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்தேன் - கமலஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நேற்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் சமூக வலைத்தளம் மூலம் உரையாடினார். இந்த உரையாடலின்போது கமலஹாசன் பல தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டார். அதில் கூறியதாவது:-

பொதுவாக ஒரு படத்தின் திரைக்கதையை எழுதி முடிக்க ஒரு வருடம் ஆகலாம். சில ஸ்கிரிப்டுகள் முடிக்க 30 மாதங்கள் வரை எடுத்துக் கொண்டுள்ளேன். ஆனால் ‘தேவர் மகன்’ படத்தின் ஸ்க்ரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்தேன்.

சிவாஜி கணேசன் கமல்ஹாசன் நடிப்பில் பரதன் இயக்கிய தேவர் மகன் திரைப்படம் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை வெறும் ஏழே நாட்களில் எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கமல் தெரிவித்தார்.

thevar magan film,script,kamalhassan,seven days ,தேவர் மகன் படம்,ஸ்க்ரிப்ட்,கமலஹாசன்,ஏழு நாட்கள்

இந்த படத்தில் இயக்குனராக பணிபுரிந்த நண்பர் பரதன், ஒரே வாரத்தில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவதாக கூறினார். அவர் கூறியதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஏழு நாட்களில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தேன்.

இப்போது என்னிடம் யாராவது பெட்டி பெட்டியாக பணத்தை வைத்து ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் என்னால் முடியாது. ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஒரு உத்வேகத்துடன் எழுதியதுதான் ‘தேவர் மகன்’ ஸ்கிரிப்ட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|