Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பதவியைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து பொறுப்போடு செயல்பட்டு வருகிறேன் ... மு.க. ஸ்டாலின்

பதவியைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து பொறுப்போடு செயல்பட்டு வருகிறேன் ... மு.க. ஸ்டாலின்

By: vaithegi Mon, 15 Aug 2022 2:17:08 PM

பதவியைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து பொறுப்போடு செயல்பட்டு வருகிறேன் ...   மு.க. ஸ்டாலின்

சென்னை: சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதிக்கும் சென்று பெற்ற மனுக்களில் நடைமுறை சாத்தியமான மனுக்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்-முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக சாதாரண-சாமானிய மக்கள் என அனைவரின் கோரிக்கையும் என்னை வந்தடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி கொண்டு வருகிறேன்.

ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு கொண்டு வருகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதுதான் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் நோக்கமாகும்.

m.k. stalin,dravida munnetra kazhagam , மு.க. ஸ்டாலின் , திராவிட முன்னேற்றக் கழகம்

இதனை தொடர்ந்து இது அனைத்துத் தொகுதிக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்தான். ஆளும் கட்சி வென்ற தொகுதி-எதிர்க்கட்சி வென்ற தொகுதி என பாகுபாடு எங்களுக்கு இல்லை. தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற வகையில் அனைத்துத் தொகுதியும் எனது தொகுதி தான். அனைத்து மக்களின் அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு கொண்டு வருகிறது. உலக விளையாட்டுப் போட்டியை நடத்துவது முதல்-ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது என்பது வரை எங்கள் முன்னால் வரும் அனைத்துக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுத்தி வருகிறோம்.

மேலும் இதற்குக் காரணம் நான் மக்களோடு மக்களாக வளர்ந்தவன். மக்களால் வளர்க்கப்பட்டவன். மிகச் சிறுவயதில் இருந்தே-பள்ளிப் பருவ காலத்தில் இருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டு என்னைப் பொது வாழ்க்கையில் ஒப்படைத்துக் கொண்டவன் நான். பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான். இன்றைக்கும் சிறு பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ முதலில் தொடர்பு கொண்டு கேட்கும் அளவுக்குச் செயல்பட்டு கொண்டு வருகிறேன்.

இதையடுத்து இயற்கைப் பேரிடர் எங்கு நடந்தாலும் உடனடியாக நீண்டு காக்கும் கரம் என்னுடைய கரமாக இருக்கும். பதவியைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து பொறுப்போடு செயல்பட்டு வருகிறேன். இப்பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என்பதை வானத்தை நோக்கிப் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக் கொள்கிறேன் என கூறினார்.

Tags :