Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன் - டிரம்ப் நம்பிக்கை

நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன் - டிரம்ப் நம்பிக்கை

By: Karunakaran Thu, 16 July 2020 09:33:08 AM

நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன் - டிரம்ப் நம்பிக்கை

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்கா திண்டாடி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார். கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும், தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் அமெரிக்க அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

trump,presidential election,america,november election ,டிரம்ப், ஜனாதிபதித் தேர்தல், அமெரிக்கா, நவம்பர் தேர்தல்

இந்த தேர்தலில் ஆளும் கட்சியின் பலம் குறையலாம் என கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. தற்போது, ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நாடு இதற்கு முன்பு பார்த்திராத வகையில் வாக்கெடுப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என டிரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தபோது, இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். நாங்கள் சிறப்பாக வேலை செய்து உள்ளோம். அது நல்ல பலன் தரும். தேர்தல் தினத்தில் நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு எண்களை பார்க்கப் போகிறீர்கள். கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒருபோதும் நான் நம்புவதில்லை. கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்புகள் பொய்யானவை என்பதை நிரூபித்தன.இந்த முறையும் அப்படியே நடக்கும். கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்யாக்கப்படும் என்று கூறினார்.

Tags :
|