Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தினேன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தினேன்

By: Nagaraj Tue, 28 Feb 2023 9:58:47 PM

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தினேன்

டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்கியிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் மகளான பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை இன்று மதியம் சந்தித்து பேசினார்.

minister udayanidhi stalin,neet exemption,prime minister modi , உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு, பிரதமர் மோடி

இதையடுத்து, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் கோரிக்கை வைத்தேன்.தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் கட்டுவது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன் என்று கூறினார்.

Tags :