Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தந்தையின் ஒருவருட சம்பளத்தில் எனக்கு விமான பயணச்சீட்டு வாங்கப்பட்டது; கூகுள் சுந்தர்பிச்சை தகவல்

தந்தையின் ஒருவருட சம்பளத்தில் எனக்கு விமான பயணச்சீட்டு வாங்கப்பட்டது; கூகுள் சுந்தர்பிச்சை தகவல்

By: Nagaraj Wed, 10 June 2020 09:44:38 AM

தந்தையின் ஒருவருட சம்பளத்தில் எனக்கு விமான பயணச்சீட்டு வாங்கப்பட்டது; கூகுள் சுந்தர்பிச்சை தகவல்

நான் அமெரிக்கா சென்று படிப்பதற்காக எனது தந்தை அவரது ஒரு வருட சம்பளத்தை வைத்துதான் விமானப் பயணச்சீட்டை வாங்க முடிந்தது என்று கூகுள் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை தனது வீட்டிலிருந்தவாறு இந்த வருடம் பட்டம் பெறும் மாணவர்களிடம் உரையாற்றினார். அதில் அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு என் தந்தை தனது ஒரு வருடச் சம்பளத்தையும் எனது விமானப் பயணச் சீட்டிற்காக மட்டும் செலவழித்தார். அதுதான் எனது முதல் விமானப் பயணமும் கூட. அப்போது அமெரிக்கா செல்வதற்கு அதிகம் செலவானது. அப்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றால் 2 டாலர் செலவாகும்.

sunder,father,one year salary,usa,study ,சுந்தர் பிச்சை, தந்தை, ஒரு வருட சம்பளம், அமெரிக்கா, படிப்பு

என்னுடைய தோல் பையின் விலையும் என் அப்பாவின் மாதச் சம்பளமும் ஒன்றாக இருக்கும். நான் வளரும்போது இணையமும் தொழில்நுட்பமும் இன்று போல் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. எனது பத்தாவது வயதில்தான் தொலைபேசியே எனக்கு முதலில் அறிமுகமானது.

பிறகு அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்கும்போதுதான் கணினியைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி வந்தபோது அதில் ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகள் எல்லா வகையான கணினிகளையும் எளிதாகப் பயன்படுத்துகின்றனர்" என்றார்.

``இந்தக் கொரோனா லாக்டௌன் நேரத்தில் தங்களது கனவுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி இந்தாண்டு கல்லூரி மாணவர்கள் கவலை அடையலாம். இப்போது வெளிப்படைத்தன்மையுடனும், நம்பிக்கையுடனும் இருந்தால் அவர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவார்கள்.

இதற்கு முன் 1920-ம் ஆண்டு ஏற்பட்ட தொற்று, 1970-ல் வியட்நாம் போர், 2001-ல் நடைபெற்ற 9/11 தாக்குதல் ஆகியவற்றைக் கடந்துதான் மாணவர்கள் சாதித்திருக்கிறார்கள். அதனால் நம்பிக்கையுடன் இருங்கள்" என்றார்.

Tags :
|
|
|