Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரிசோதனை செய்யும் அளவை குறைக்க கூறினேன் - டிரம்ப்

கொரோனா பரிசோதனை செய்யும் அளவை குறைக்க கூறினேன் - டிரம்ப்

By: Karunakaran Mon, 22 June 2020 10:59:56 AM

கொரோனா பரிசோதனை செய்யும் அளவை குறைக்க கூறினேன் - டிரம்ப்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ளது.கொரோனா காரணமாக இந்த தேர்தல் நடக்குமா என சந்தேகம் எழுந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிச்சயமாக தேர்தல் நடந்தே தீரும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் அங்கு தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் ஒக்லஹோமா மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

coronavirus,us election,trump,corona testing,republican party ,டிரம்ப்,கொரோனா பரிசோதனை,தேர்தல் பிரசாரம்,குடியரசு கட்சி

இந்த பிரச்சார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், கொரோனா பரிசோதனை என்பது இரு பக்கங்களிலும் கூர்மையாக உள்ள வாள் போன்றது. இதில் கொடுமையான பகுதி என்னவென்றால் நீங்கள் பரிசோதனைகளை அதிகரிக்கும் போது வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆகையால், கொரோனா பரிசோதனை செய்யும் அளவை குறைக்க வேண்டுமென எனது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார். இதுகுறித்த உண்மையான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரி கூறுகையில், டிரம்ப் நகைச்சுவையாகவே கூறினார். அதை ஊடகம் தான் பெரிதுபடுத்தி விட்டது. உலகிலேயே அமெரிக்காதான் மிகவும் அதிகமான கொரோனா பரிசோதனை செய்துள்ளது. அது மேலும் தொடர்ந்து பரிசோதனைகளை செய்யும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்போதுவரை 2 கோடியே 84 லட்சத்து 66 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|