Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

By: Monisha Mon, 30 Nov 2020 2:36:40 PM

விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான நீண்ட நாள் சஸ்பென்சை இன்று உடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

actor,rajinikanth,politics,party,executives ,நடிகர்,ரஜினிகாந்த்,அரசியல்,கட்சி,நிர்வாகிகள்

நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், பால்கனியில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன். என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்துள்ளனர் என்று ரஜினிகாந்த் கூறினார்.

Tags :
|
|