Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய-சீன மக்களுக்கு அமைதியை கொடுக்க முடிந்த அனைத்தையும் செய்வேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்திய-சீன மக்களுக்கு அமைதியை கொடுக்க முடிந்த அனைத்தையும் செய்வேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

By: Karunakaran Sat, 18 July 2020 10:01:20 AM

இந்திய-சீன மக்களுக்கு அமைதியை கொடுக்க முடிந்த அனைத்தையும் செய்வேன் - அமெரிக்க அதிபர்  டிரம்ப்

லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லையில் பதற்றம் நிலவியது.

இந்த பதற்றத்தை முழுமையாக தணிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதலுக்கு பின் 59சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

america president,trump,india,china ,அமெரிக்க ஜனாதிபதி, டிரம்ப், இந்தியா, சீனா

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறுகையில், ஜனாதிபதி டிரம்ப் இந்திய மக்களை நேசிப்பதாக கூறினார். அதேபோல் சீனா மக்களையும் அவர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இருநாட்டு மக்களுக்கும் அமைதியை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் அதிபர் டிரம்ப் செய்ய விரும்புவதாக கெய்லீ மெக்னானி தெரிவித்துள்ளார். இந்திய-சீன இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் தற்போது சுமூக நிலை எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|